முகப்பு
கன்னியாகுமரி

ஜி.கே. வாசன் 27இல் தக்கலை வருகை

குமரி மாவட்டம், தக்கலைக்கு மே 27ஆம் தேதி வருகைதரும் தமாகா தலைவர் ஜி.கே. வாசனுக்கு சிறப்பான வரவே

Updated On : 15 மே, 2018 at 12:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

குமரி மாவட்டம், தக்கலைக்கு மே 27ஆம் தேதி வருகைதரும் தமாகா தலைவர் ஜி.கே. வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டுமென கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தக்கலையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு தமாகா மாவட்டத் தலைவர் டாக்டர் வி.எம். பினுலால்சிங் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் நகரத் தலைவர் வழக்குரைஞர் அஜிகுமார் வரவேற்றார். திருவட்டார் வட்டாரத் தலைவர்கள் பிராங்கிளின் (மேற்கு) , ஐசக் ஜெயதாஸ் (தெற்கு), மாவட்ட வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் என்.என். விஜிகுமார், மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் டாக்டர் சிம்சன், மாவட்ட மாணவர் அணித் தலைவர் பினிஷ், மகளிரணித் தலைவர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுச்செயலர்கள் புஷ்பாகரன், ராஜன், செயலர்கள் சார்லஸ், ஞானதாஸ், இளைஞரணி வட்டாரத் தலைவர்கள் வினோ, மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவட்டார் இளைஞரணித் தலைவர் கிறிஸ்துதாஸ் நன்றி கூறினார்.
குமரி மாவட்டத்துக்கு 27ஆம் தேதி வருகை தரும் ஜி.கே. வாசனுக்கு 100 வாகனங்களில் தக்கலையில் வரவேற்பு அளிக்கவேண்டும். திருவட்டார் மற்றும் குலசேகரம் பகுதிகளில் தமாகா புதிய கொடிக் கம்பங்கள் அமைத்து கட்சித் தலைவர் தலைமையில் கொடியேற்றவேண்டும். ஆற்றூர் சந்திப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.