கன்னியாகுமரி

குமரி அருகே காதல் ஜோடியை வழிமறித்து தாக்குதல்: மூவர் காயம்

DIN

கன்னியாகுமரி அருகே போலீஸ் விசாரணைக்கு காரில் வந்த காதல் ஜோடியை 15 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அரிவாளால் வெட்டியதில் மூவர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஜெயபால்.  இவரது மகள்  டிக் ஷோனா (22). அதே ஊரைச்சேர்ந்தவர் சிம்சன் மகன் ஸ்டார்லின் (24). இருவரும் காதலர்கள். காதலுக்கு இருவீட்டிலும்  எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி ஜெயபால் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அப்போது டிக் ஷோனா கடற்கரை சாலையில் உள்ள கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால்  இது குறித்து பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
   இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி  ஸ்டார்லினும், டிக் ஷோனாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளிவந்ததாம்.  மேலும் காதல் ஜோடி குளச்சலில் தங்கியிருப்பது தெரியவந்ததாம்.  இந்நிலையில் போலீஸ் விசாரணைக்காக குளச்சலில் இருந்து காரில் காதல் ஜோடி மற்றும் ஸ்டார்லின் உறவினர் என நான்கு பேர் வந்தனராம்.  இவர்கள் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது,  15க்கும் மேற்பட்டோர்  வழிமறித்து,   காரின் கண்ணாடியை உடைத்து ஸ்டார்லினை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தடுத்த ஸ்டார்லின், உறவினர்கள் சுரேஷ்  (44), அருள் (58) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காரில் இருந்த டிக் ஷோனாவை மற்றொரு காரில் கடத்திச் சென்றனர்.
   இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துபாண்டியன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டனர். 
 இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் டிக் ஷோனாவின் தந்தை ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள் செல்வம், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்ளிட்ட 15 பேரை தேடி வருகின்றனர். பலத்த காயமடைந்த மூவரும் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT