கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் வாக்காளர்சிறப்பு சுருக்க திருத்த முகாம்

DIN

ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை, மாவட்ட பார்வையாளர் அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செப்.1ஆம் தேதி முதல் அக். 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம்.
ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் தொடக்கப் பள்ளியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்முகாமை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த மாவட்ட பார்வையாளர் அதுல்ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கோட்டாட்சியர் வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT