கொட்டாரம் அரசுப் பள்ளியில் ரூ. 2 லட்சத்தில் அலங்கார தரைத்தளம்
கொட்டாரம் அரசு தொடக்கப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள
கொட்டாரம் அரசு தொடக்கப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைதளம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தொடக்க கல்வி உதவி அலுவலர் ஷோபனகுமார் தலைமை வகித்தார். கல்விக் குழுத் தலைவர் வை. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ. தரைதளத்தை திறந்து வைத்துப் பேசினார்.
இதில், தொலைபேசி ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் என். தாமரைபாரதி, லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கே. முத்துசாமி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு, முன்னாள் கவுன்சிலர்கள் வைகுண்டபெருமாள், பாபு, மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியை எம். ராஜேஸ்வரி நன்றி கூறினார்.