கன்னியாகுமரி

4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்;  தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடக்கப்படுவதை கண்டிப்பது, வருவாய் ஈட்டும் வகையில் பி.எஸ்.என்.எல். சொத்துக்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார்.  அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலர் ஆறுமுகம், நிர்வாகி செல்வராஜன், ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலர் பி.ராஜூ, மாநில துணைச் செயலர் பி.இந்திரா, அகில இந்திய பொருளாளர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT