தக்கலை, அப்பட்டுவிளை பகுதியில் பிப்ரவரி 26 மின்தடை
தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மஞ்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் மின்பாதையில் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மணலி, மேட்டுகடை, தக்கலை, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, வெள்ளச்சிவிளை ஆகிய இடங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்றைய தினம் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.