கன்னியாகுமரி

கேரளபுரத்தில் ரூ.5 லட்சத்தில் புதிய நூலகக் கட்டடம் திறப்பு

DIN

தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்தில் ஸ்ரீ ராகவேந்தரா  நற்பணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், ரூ. 5 லட்சத்தில்  புதிய நூலகக் கட்டடம்  திறந்துவைக்கப்பட்டது.
கேரளபுரத்தில் நேரு இளையோர் மையத்துடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திர நற்பணிமன்றம்  செயல்பட்டு வருகிறது. இந்த நற்பணி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கி புதிய நூலக கட்டடம் ஏற்பாடு செய்தார். அதன் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொங்கல் திருவிழாவில் ஒரு பகுதியாக புதிய நூலகக் கட்டடத்தையும் எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும்,   அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்- மாணவிகளுக்கு நலஉதவிகள், ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத்  தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீ குமார், கோபாலகிருஷ்ணன்,  முன்னாள்  பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன்,  எஸ்.ஏ. புகாரி,  கலையூர்காதர், தக்கலை சந்திரன்,  தினேஷ்குமார், லெனின் மற்றும் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT