கன்னியாகுமரி

மருத்துவ விழிப்புணர்வு முகாம்

DIN

இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் மற்றும் போதை பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கடையாலுமூடு அருகேயுள்ள மருதம்பாறையில்  நடைபெற்றது.
களியக்காவிளை, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முதுகலை சமூக மேம்பாட்டுத் துறையும், கன்னியாகுமரி சமூக சேவை மையமும் இணைந்து நடத்திய இம்முகாமில், அருள்பணியாளர் அஜீஸ்குமார் தொடக்கவுரை நிகழ்த்தினார். மலங்கரை கல்லூரி சமூகப் பணித் துறை பேராசிரியர் பிரவின் ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார். கன்னியாகுமரி சமூக சேவை மையத்தின் அருள்பணியாளர் எபி, கடையாலுமூடு பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் பேசினர். ராணி, சுனிதா ஆகியோர் இயற்கை மருத்துவத்தின் பயன்கள் குறித்தும், துறை மாணவி சினி போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கருத்துரையாற்றினர்.
முதுகலை சமூகப் பணித் துறை மாணவி ஜெப ஷீலா வரவேற்றார். மாணவி ஆனந்தி நன்றி கூறினார். மாணவி அபிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT