கன்னியாகுமரி

நாகர்கோவிலில் திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம்

DIN

நாகர்கோவில் குறளகம் சார்பில் திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம் கோட்டாறு தமிழ் அரங்கில்  நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு இந்துக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நாகலிங்கம் தலைமை வகித்தார்.  பழவிளை காமராஜ் கல்வியியல் கல்லூரி முதல்வர் குமரேசன், திருக்குறளில் தெரிந்து செயல்வகை எனும் அதிகாரம் குறித்துப் பேசினார். யோகிராம்சுரத்குமார் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார்.  
அல்போன்சா பள்ளியின் ஆசிரியர் கார்மல்ராய் கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய அல்போன்சா பிள்ளைத்தமிழ் நூல் குறித்து பேசினார். கூட்டத்தில் சிவ.தங்கப்பன் கவிதை வாசித்தார். இதில், கவிமணி நற்பணி மன்றத் தலைவர் புலவர் சிவதாணு, தமிழாலயம் தெய்வநாயக பெருமாள்,
திருக்குறள் ஆய்வு மைய குமரிச்செல்வன், பிரம்மஞான சங்கத்தின் பொன்.மகாதேவன், எழுத்தாளர்கள் பட்டத்தி மைந்தன்,  சரலூர் ஜெகன், ஜூடி சுந்தர், ஒளிவெள்ளம் பிதலிஸ்,  குறளக மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். 
குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். நிகழ்ச்சியினை கவிஞர் தங்கத்துமிலன் தொகுத்து வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT