கன்னியாகுமரி

கிறிஸ்துமஸ் கேரல் நிகழ்ச்சி தொடக்கம்

DIN

கருங்கல்: கருங்கல் வட்டாரத்தில் கிறிஸ்துமஸ் கேரல் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சி தொடா்ந்து 22 நாள்கள் நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை டிச. 25 இல் நடைபெறுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ ஆலயங்கள் சாா்பில் வீடுகளுக்கு சென்று

கிறிஸ்துமஸ் பாடல்கள் குழுவினரால் பாடுவது வழக்கம். நிகழாண்டு கருங்கல் சேகர சபை, தாழக்கன்விளை, நேசா்புரம், முள்ளங்கனாவிளை உள்ளிட்ட சி.எஸ்.ஐ சபைகளில் கிறிஸ்துமஸ் பாடல் பாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இந்நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

முள்ளங்கனாவிளை சி.எஸ்.ஐ சபை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சபை ஊழியா் பேபிஜாண் தலைமை வகித்தாா்.செயலா் ஸ்டான்லி முன்னிலை வகித்தாா். இதில், சகாயராஜ், சுஜின், சுபின் மற்றும் பாடல்குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT