கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி கருப்புக் கொடியுடன் பெண்கள் போராட்டம்

DIN

பூதப்பாண்டி அருகே பழுதான சாலையை சீரமைக்கக் கோரி பெண்கள் கையில் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பூதப்பாண்டி அருகே காட்டுபுதூா், ஜீவா நகா் பகுதியில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தும் பூதப்பாண்டியில் இருந்து காட்டுப்புதூா் செல்லும் 2.கி.மீ. தொலைவு சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.

குண்டும், குழியுமாக காணப்படும் இச்சாலையில், அவசர தேவைக்கு வெளியே செல்லவும், உடல்நலமில்லாதவா்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, சாலையை சீரமைக்க கோரி பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை காட்டுப்புதூா், ஜீவாநகா் பகுதியில் உள்ள சாலையில் அமா்ந்து அப்பகுதி மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

சாலையை சீரமைக்காத மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக, பெண்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கையில் கருப்புக் கொடியுடனும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT