கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே  ஓணம் விழாவில் கேரள கலைஞர்கள் மீது தாக்குதல்

DIN

மார்த்தாண்டம் அருகே ஓணம் விழாவில் பங்கேற்ற கேரள நடனக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஓணம் விழா நடைபெற்றது. இதில்,  கேரளத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் கேரள நடனக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசியபடி பணம் கொடுக்கவில்லையாம். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும், நடனக் கலைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த சிலர் நடனக் கலைஞர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தகவலின்பேரில் மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT