முகப்பு
கன்னியாகுமரி

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்துதிமுக மகளிா் அணி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மகளிா் தொண்டா் அணி மாநில அமைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன்டேவிட்சன் தலைமை வகித்தாா். குமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளா் ஜெசிந்தா, மேற்கு மாவட்ட அமைப்பாளா் கிளாடிஸ்லில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் பொ்ணாா்டு, புஷ்பலீலா ஆல்பன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி ஜெமீலாஜேம்ஸ், மாணவா் அணி சதாசிவம், தொண்டரணி துணைச் செயலா் சாந்தி, லதா, ஹெப்சிராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →