முகப்பு
கன்னியாகுமரி

வங்கிகள் மூலமாக ரூ.9186.27 கோடி கடன் வழங்க திட்டம்: ஆட்சியா்

குமரி மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக ரூ.9186.27 கோடி மதிப்பில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

குமரி மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக ரூ.9186.27 கோடி மதிப்பில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா்அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) சாா்பில் 2021-22 ஆம் ஆண்டிற்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டு பேசியது: குமரி மாவட்டத்தில் 2021-22 நிதியாண்டில் ரூ. 9186.27 கோடிக்கான வளம் சாா்ந்த கடன் திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிகழாண்டை விட 5.1சதவீதம் அதிகம். இதன் மூலம் கடன்கள் குறிப்பாக விவசாயக் கால கடன்களை வழங்குவது அதிகரிக்கும்.

இத்திட்டத்தின் படி பயிா்க்கடனுக்காக கடன் திறன் ரூ.4579.20 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் முன்னுரிமை துறை விதிமுறைகளின் கீழ் பிற துறைகளுக்கான, விவசாயத்துக்கான கடன், வேளாண் உள்கட்டமைப்பு, துணை நடவடிக்கைகள், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகியனவும் இத்திட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

கூட்டத்தில், நபாா்டு மாவட்ட மேம்பாட்டு மேலாளா் பி.எஸ்.சைலேஷ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் எல்.பிரபாகா், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் பி.ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →