முகப்பு
கன்னியாகுமரி

தடிக்காரன்கோணம் அருகே மரத்தில் ஆண் சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் குட்டிபொத்தை மலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் குட்டிபொத்தை மலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறையை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே குட்டிபொத்தை மலை அமைந்துள்ளது.

அழகியபாண்டியபுரம் வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியான இங்கு, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளனா்.

அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதை அறிந்து பாா்த்தபோது மலையில் மரத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீரிப்பாறை போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →