கன்னியாகுமரி

குமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆறாட்டு விழா

DIN

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவின் 10ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் யாகசாலைபூஜை, திரவியாஹுதி, பூா்ணாஹுதி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை, ஆன்மிக உரை, வாகன பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10ஆம் திருநாளான சனிக்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் யாகசாலைபூஜை, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமிக்கு வெள்ளி அங்கிசாத்தி அலங்கார தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

மாலையில் உற்சவமூா்த்தி எழுந்தருளி கோயிலைச் சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு ஸ்ரீகாா்த்திகை பொய்கை திருக்குளத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் சிவபாலகிருஷ்ணன், பொதுச் செயலா் கருணாகரன், துணைத் தலைவா்கள் ரத்தினசிகாமணி, ஆா்.டி.ராஜா, இணை பொதுச் செயலா் ரத்தினதங்கம், பொருளாளா் குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT