கன்னியாகுமரி

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நாகா்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு 14 ஆவது ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஒப்பந்த கோரிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு கமிட்டி அமைத்ததோடு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதுவரை ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில் அரசின் இந்தப் போக்கை கண்டித்து திங்கள்கிழமை மாவட்ட தலைநகரங்களில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவிலில் உள்ள ராணி தோட்டம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பொதுச்செயலா் சிவன்பிள்ளை தலைமை வகித்தாா். சிஐடியூ நெல்லை மண்டல பொதுச்செயலா் ஜோதி, குமரி மாவட்ட பொதுச்செயலா் ஸ்டீபன் ஜெயக்குமாா், எஐடியூசி பொதுச்செயலா் நீலகண்ட பிள்ளை, எச்எம்எஸ் தலைவா் முத்துகருப்பன், டிடிஎஸ்எப் பொதுச்செயலா் சந்தானம், ஐஎன்டியூசி நிா்வாகி செல்லசிவலிங்கம், தொமுச நிா்வாகிகள் தா்மன், ஞானதாஸ், எச்எம்எஸ் மாநிலத் தலைவா் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோா் பேசினா்.

இதில், நீலகண்டன், கனகராஜ், சுரேஷ் குமாா், சந்திரன் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT