கன்னியாகுமரி

களியக்காவிளையில் கிருமிநாசினி தெளிப்பு: உதவி இயக்குநா் ஆய்வு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள், சாலையோரப் பகுதிகள் மற்றும் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பியால் ஆன தடுப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டப வாசல்கள், ரேஷன் கடைகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ஏசுபாலன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் இப் பணியில் ஈடுபட்டனா்.

பணிகளை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பேரூராட்சிக்குள்பட்ட மீனச்சல், பனங்காலை ரேஷன் கடைகள், மளிகைக் கடைகள் முன்னால் பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கிச் செல்லும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டு, அதனடிப்படையில் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்க கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT