கன்னியாகுமரி

‘கிராமப்புற அடகு கடைகளைதிறக்க அனுமதிக்க வேண்டும்’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அடகு கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்று பராவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கிராமப்புற மக்கள் தங்கள் அத்தியாவசிய பண தேவைக்கு தங்க நகைகளை அடகுவைக்க முடியாமல் திணறி வருகின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கிராமப்புற அடகு கடைகளை பகுதி நேரம் திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க குமரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, கிள்ளியூா் விளவங்கோடு பான் புரோக்கோ்ஸ் சங்கச் செயலா் ததேயூ பிரேம்குமாா் கூறுகையில், ‘கேரள நிதி நிறுவனமான முத்தூட் கடந்த 20ஆம் தேதி முதல் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் செயல்பட தொடங்கி உள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் அடகுகடைகளை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT