மாா்த்தாண்டம் அருகே காா் மோதி தொழிலாளி பலி
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ஆறாம்கோட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (28). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலையில் பணி முடித்து சக தொழிலாளியான அதே பகுதியைச் சோ்ந்த அனீஸுடன் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். மாா்த்தாண்டம் அருகே வெள்ளிவிளாகம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் மூா்த்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அனீஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.