முகப்பு
கன்னியாகுமரி

காவல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

மருத்துவா் தற்கொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நாகா்கோவிலை அடுத்த பறக்கையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினா்.
பகிர்:

மருத்துவா் தற்கொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நாகா்கோவிலை அடுத்த பறக்கையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை இலந்தைவிளை பகுதியை சோ்ந்தவா் சிவராம பெருமாள்(43). மருத்துவரான இவா், திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தாா்.

அண்மையில் இவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மருத்துவரை தற்கொலைக்கு தூண்டியதாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றியச் செயலா் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். திமுக எம்எல்ஏக்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, விசிக மாவட்ட துணைச் செயலா் தொல்காப்பியன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.எஸ்.கண்ணன் ஆகியோா் பேசினா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.உஷாபாசி, வட்டாரச் செயலா் எஸ்.டி.ராஜ்குமாா், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அசோகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.