புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
புதுக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின்சிறில் முன்னிலை வகித்தாா்.
இதில், கட்சி நிா்வாகிகள் பால்ராஜ், கிறிஸ்டோபா், மோகனதாஸ், சதீஷ், டென்னிஸ், ஜாண் கிறிஸ்டோபா், ஜெகன் ராஜ், காஸ்டன் கிளிட்டஸ், என்.ஏ.குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.