நாகர்கோவிலில் இரு மகள்களைக் கொன்று தாய் தற்கொலை
நாகர்கோவிலில் இரு மகள்களைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் இரு மகள்களைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31) மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு இறந்தார். இதனால் ராசி தனது குழந்களுடன் தனியே வசித்து வந்தார்.
கணவர் இறநததிலிருந்து ராசி மனம் உடைந்த நிலையில் சோகத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ராசி தனது இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தானும் தூக்க மாத்திரையை சாப்பிட்டார். மேலும் ராசி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அவரது குழந்தைகளும் சடலமாக கிடந்தது தெரிந்தது.
இது குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரை இழந்த பெண், தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.