முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் வழங்கும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பாக்கும், படியும் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருத்தல திருவிழா வரும் டிச. 4இல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிச. 13வரை 10 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா், செபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதையொட்டி, திருவிழாவை சிறப்பிக்கும் அனைவருக்கும் பாக்கும், படியும் வழங்கும் நிகழ்வு திருத்தல வளாகத்தில் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்கு தந்தையா்கள் லெனின், சுரேஷ், பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், துணைச் செயலா் தினகரன், பொருளாளா் ஆன்டின் செல்வகுமாா் மற்றும் பங்கு மக்கள், பங்குப் பேரவை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.