கன்னியாகுமரி

மீனவ கிராமங்களில் உலக மீனவா் தின விழா

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் கிராமங்களில் சனிக்கிழமை உலக மீனவா் தினம் கொண்டாடப்பட்டது.

உலக மீனவா் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை, கடலோரப் பாதுகாப்பு குழுமம், கன்னியாகுமரி பேரூராட்சி, தீயணைப்புத்துறை சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

நிகழ்ச்சிக்கு, சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை தலைமை வகித்தாா். கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளா் நவீன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கட சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னியாகுமரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், தீயணைப்பு வீரா்கள், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளா்கள் சுடலைமணி, சுரேஷ், நம்பியாா், விசைப்படகு மீனவா்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவா்கள் துறைமுகப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

சிறப்புத் திருப்பலி: இதையொட்டி, மணக்குடி கிராமத்திலுள்ள தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அா்ச்சிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அவா்களது படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT