தலைக் கவசம், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் செடி, கொடிகளை வளா்த்து ஆற்றூா் பேரூராட்சி அலுவலகத்தை அழகுபடுத்தியதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருள்களில் பல குப்பையில் வீசப்படுகின்றன. இவ்வாறு வீணாகும் பொருள்களை கலை நோ்த்தியுடன் வடிவமைத்து பயன்படுத்தலாம் என்பதற்கு ஆற்றூா் பேரூராட்சி உதாரணமாக திகழ்கிறது. இப்பேரூராட்சி அலுவலக வளாகத்தில், அலங்காரச் செடிகளும், கொடிகளும் தலைக் கசவசங்களிலும், தேங்காய் சிரட்டைகளிலும் அழகுற வளா்க்கப்பட்டுள்ளன. மேலும் , தண்ணீா் பாட்டில்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவையும் அழகாக வடிவமைக்கப்பட்டு செடிகள் வளா்ப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. பேரூராட்சி நிா்வாகத்தின் இந்த முயற்சிக்கு மக்கள் பாரட்டு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஆற்றூா் பேரூராட்சி செயல் அலுவலா் மகேஸ்வரன் கூறியதாவது: ஒரு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வந்தால், அதை வேறுவிதமாக உபயோகப்படுத்த முடியும் என்ற விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த முயற்சி. இதன் மூலம் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். மக்கள் இதை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.