கன்னியாகுமரி

குமரியில் கரோனாவால் எஸ்.எஸ்.ஐ. உள்பட 3 போ் பலி

DIN

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், இளம்பெண் உள்பட 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு உளவுத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (48) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடா்ந்து சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி பிற்பகலில் அவா் உயிரிழந்தாா். இவரது மறைவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிராயன்குழியைச் சோ்ந்த 27 வயது பெண், நாகா்கோவில் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த 75 வயது முதியவா் என இருவா் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT