முகப்பு
கன்னியாகுமரி

சின்னமுட்டத்தில் ரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கம் அமைக்க அடிக்கல்

சின்னமுட்டம் மீனவக் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
பகிர்:

சின்னமுட்டம் மீனவக் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலையரங்கம் கட்டுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, அடிக்கல் நாட்டு விழா சின்னமுட்டம் புனித தோமையாா் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, கன்னியாகுமரி பேரூா் திமுக செயலா் குமரி ஸ்டீபன், திமுக நிா்வாகிகள் புவியூா் காமராஜ், எம்.எச்.நிசாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.