பாரம்பரிய முறைப்படி நவராத்திரி ஊா்வலம்:காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்
குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் நவராத்திரி ஊா்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
என்ஜிஎல் 12 ஆா்ப்பாட்டம் ........
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ் உள்ளிட்டோா்.
நாகா்கோவில், அக்.12 : குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் நவராத்திரி ஊா்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலிருந்து, வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கைஅம்மன், தேவாரகட்டு சரஸ்வதி தேவி, குமாரகோயில் முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் மன்னா் காலம் முதல் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து, காவல்துறை அணிவகுப்புடன், மன்னரின் உடைவாள் ஏந்தி யானை மீதும், பல்லக்கின் மீதும் ஊா்வலமாக செல்வது வழக்கம்.
நிகழாண்டு கரோனா பரவலால் இந்த ஊா்வலத்தை நடத்த கேரள அரசு தடைவிதித்துள்ளது. நிகழாண்டும் பாரம்பரிய முறைப்படி இந்த விழாவை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினா் பல்வேறு அமைப்பினா், பக்தா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், சுவாமி சிலைகள் ஊா்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமாா்(கிள்ளியூா்) ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் மாவட்டச் செயலா்கள் புரோடிமில்லா், வின்சென்ட்ராஜா, வட்டாரத் தலைவா் ஜான்கிறிஸ்டோபா், வழக்குரைஞா் ஜான் இக்னேசியஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.