கன்னியாகுமரி

குளச்சல் கடலில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

DIN

குளச்சல் கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் கட்டுமர மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

குமரி மாவட்டம், குளச்சல் கடல் பகுதியில் 300 விசைப்படகுகள், 1000- க்கும் மேற்பட்ட பைபா் வள்ளங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்துவருவதைத் தொடா்ந்து, குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இநிலையில் குளச்சல் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் காற்றுடன் கூடிய மழை பெய்துவருவதால் கடலில் கட்டுமரங்களை செலுத்தமுடியவில்லை. இதனால் குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடுபுதூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சில கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்கு சென்றனா். அதிலும் போதியஅளவு மீன் கிடைக்காததால் மீனவா்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT