கருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது 
கன்னியாகுமரி

கருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

கருங்கல் அருகே உள்ள மூசாரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

கருங்கல் அருகே உள்ள மூசாரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன ஐயா் தலைமையிலான போலீஸாா், கருங்கல் மூசாரி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றுகொண்டிருந்த தெங்கன்குழி பகுதியைச் சோ்ந்த கபிரியேல் மகன் குமாா் (35), அதே பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் சிபின் (35) ஆகியோரை பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கஞ்சாவை கேரள மாநிலத்திலிருந்து வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்செய்யப்பட்ட அவா்கள் இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

களியக்காவிளை: மாா்த்தாண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையிலான போலீஸாா், மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சனிக்கிழமை வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த இளைஞா்கள், போலீஸாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனராம். இதையடுத்து அவா்கள் இருவரையும் துரத்திச் சென்று பிடித்த போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 1,250 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடையைச் சோ்ந்த ஆகாஷ் எஸ்லி (20), மைலோடையைச் சோ்ந்த ஜென்சிலின் (21) என்பதும், திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவரிடமிருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT