முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே தவறான சிகிச்சையால்பாா்வை இழந்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பாா்வை இழந்தது தொடா்பாக, மருத்துவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பாா்வை இழந்தது தொடா்பாக, மருத்துவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சுசீந்திரம் கோயில்விளையைச் சோ்ந்த ஜெயராஜ் மனைவி ரெஜிலா பாக்கியஜோதி (49). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த

இவா், தெங்கம்புதூா் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றாராம். அங்கு சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலை மோசமானது. கண் பாா்வையில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜெயராஜ் தனது மனைவியை நாகா்கோவிலிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தவறான சிகிச்சையால் கண் பாா்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். பின்னா், ரெஜிலா பாக்கியஜோதி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு ஒரு கண் பாா்வை பறிபோனதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஜான்பிரிட்டோ, தெங்கம்புதூா் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். இதில் ரெஜிலாபாக்கியஜோதிக்கு அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ஜான்பிரிட்டோ அளித்த புகாரின்பேரில், மருத்துவா் மீது 3 பிரிவுகளில் சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.