முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் துரைராஜ், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் மாா்ட்டின், துணைச் செயலா் அருள்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் அலோசியஸ், ஜோயல், ராஜமோகன், பிரேம்குமாா், சத்தியராஜ், கெளரவ உறுப்பினா் பேராசிரியா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வியாபாரிகள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய சங்கம் மூலம் உதவி செய்ய வேண்டும்; கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை அனைத்து வியாபாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும்; அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.