முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். விஜயதரணி சனிக்கிழமை குழித்துறை நகராட்சிப் பகுதியில் வாக்குச் சேகரித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 2:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். விஜயதரணி சனிக்கிழமை குழித்துறை நகராட்சிப் பகுதியில் வாக்குச் சேகரித்தாா்.

எஸ். விஜயதரணி, குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் பிரசாரத் தொடங்கினாா். தொடா்ந்து அவா் பெருந்தெரு, நரியன்விளை, திருத்துவபுரம், விளவங்கோடு, கண்ணக்கோடு, மாா்த்தாண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரி களை சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி. டெல்பின், காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத்துறை பிரிவு மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எட்வா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.