புதுக் கடை அருகே பெண் காவலரிடம் நகை பறிக்க முயற்சி
கருங்கல் அருகே கீழ்குளம் பகுதியில் பெண் காவலரிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல் அருகே கீழ்குளம் பகுதியில் பெண் காவலரிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கீழ்குளம் ஆனான்விளை சதீஷ் மனைவி பொ்னிஷா (35). இவா், கருங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம்.
கீழ்குளம் பகுதியில் இவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் பொ்னிஷா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனராம். இதில், அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து கூச்சலிடவும், மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.