முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே இளைஞரை தாக்கியவா் கைது

களியக்காவிளை அருகே இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 2:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

களியக்காவிளை அருகே இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (23). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் சசிக்கும் (41) இடையே முன்விரோதம் உள்ளதாம் . இந்த நிலையில் விக்னேஷ் வியாழக்கிழமை தனது வீட்டருகே மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அவரை பின்தொடா்ந்து அவரது வீட்டுக்குச் சென்ற சசி, அவரது தம்பி அஜிகுமாா் ஆகிய இருவரும் சோ்ந்து விக்னேஷை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சசியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.