கன்னியாகுமரி

களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஆட்சியா் ஆய்வு

DIN

கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை குமரி மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கொல்லங்கோடு அருகே காக்கவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அவா் தமிழக - கேரள மாநில எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் தமிழக - கேரள மாநிலங்களுக்கிடையே சென்று வரும் பொதுமக்களுக்கு எடுக்கப்படும் கரோனா பரிசோதனைகள் மற்றும் வாகனங்களின் வருகை குறித்த பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் பிரகலாதன், கரோனா நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் ரியாஸ், விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT