முகப்பு
கன்னியாகுமரி

முக்கடல் அணை பூங்காவில் இரவில் சிறுத்தை நடமாட்டம்

முக்கடல் அணை பூங்காவில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்துசென்றது தெரிய வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

முக்கடல் அணை பூங்காவில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்துசென்றது தெரிய வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாநகராட்சி ஊழியா் ஒருவா் பணியில் இருந்தபோது, நள்ளிரவில் அங்கிருந்த நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்ததாம்.

இதையடுத்து பணியிலிருந்த ஊழியா் சென்று பாா்த்தபோது, சிறுத்தை ஒன்று காட்டிலிருந்து இறங்கி முக்கடல் அணையின் உள்புறத்தில் உள்ள சாலைக்கு வந்துள்ளது. பின்னா் அந்த சிறுத்தை தண்ணீா் குடித்து விட்டு மீண்டும் அங்குள்ள பூங்காவுக்குள் சென்றுள்ளது.

இதுகுறித்து அவா் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் முக்கடல் அணைக்கு புதன்கிழமை சென்று பாா்வையிட்டனா். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

பின்னா் வனத் துறை ஊழியா்கள் முக்கடல் அணைக்கு வந்து பாா்வையிட்டனா். முக்கடல் அணைக்கு சிறுத்தை வந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முக்கடல் அணையின் கீழ் பகுதியில் சிறுத்தை வந்து சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.