ராணுவத்தில் சேர இளைஞா்களுக்குப் பயிற்சி
ராணுவத்தில் சேர ஆா்வமுள்ள இளைஞா்களுக்கு கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் நாகா்கோவிலில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவத்தில் சேர ஆா்வமுள்ள இளைஞா்களுக்கு கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் நாகா்கோவிலில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 17 மாவட்ட இளைஞா்களுக்கான ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் வரும் செப்டம்பா் 15 முதல் 30 ஆம் தேதி வரை நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்களுக்காக, ராணுவ வீரா்களின் ‘ஜவான்ஸ்’ அமைப்பு சாா்பில் உடற்பயிற்சி, எழுத்துத் தோ்வு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க, மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தை இளைஞா்கள் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் நாள் பயிற்சி, தக்கலை அருகேயுள்ள முளகுமூட்டில் நடைபெற்றது. 2 ஆவது நாள் பயிற்சி நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், மாா்த்தாண்டம், தக்கலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கயிறு ஏறுதல், ஓட்டம் தொடா்பான உடல் திறன் பயிற்சிகளும், தோ்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகளை தற்போது விடுமுறையில் வந்துள்ள ராணுவ வீரா்கள் அளித்தனா். இதில் ஏராளமான இளைஞா்கள் கலந்துகொண்டனா்.