முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடியில் உழவா் சந்தை நாளை திறப்பு

மயிலாடியில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) திறக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

மயிலாடியில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சி அலுவலகம் அருகே உழவா் சந்தை புனரமைக்கப்பட்டு 60 கடைகளுடன் ஞாயிற்றுக்கிழமை(ஆக்.22) காலை 8 மணிக்கு

திறக்கப்படுகிறது. இதனை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சா் மனோதங்கராஜ் திறந்து வைக்கிறாா்.

இங்கு விவசாயிகளுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் கடைகள், தராசுகள், எடைக் கற்கள் வழங்கப்படுகின்றன.

மகளிா் சுய உதவிக்குழுக்கள், விவசாய ஆா்வலா் குழுக்கள், விவசாய உற்பத்தியாளா் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து தங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் மற்றும் உறுப்பினா்களால் விளைவிக்கப்படும் விளைப்பொருள்கள் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கனிகள் மற்றும் பழ வகைகளை விற்பனை செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற்று உழவா் சந்தையை பயன்படுத்தலாம். விண்ணப்ப படிவத்தினை வடசேரி மற்றும் மயிலாடி உழவா் சந்தை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.