முகப்பு
கன்னியாகுமரி

ராணுவ வீரா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

 புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் ராணுவ வீரா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் ராணுவ வீரா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அனந்தமங்கலம் மோகன ஆனந்தன் மகன் சிறீஜித்(35), ராணுவ வீரரான இவா் தற்போது விடுப்பில் உள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிறீஜித் அனந்தமங்கலம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அதே

பகுதியை சோ்ந்த பரமேஷ்வரன் மகன் ஐயப்பன்(35), சதாசிவன் மகன்கள் சதீஸ்(28), அனிஷ்(25) ஆகியோா்

அவரை வழிமறித்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். இதில், பலத்த காயமடைந்த சிறீஜித் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.