முகப்பு
கன்னியாகுமரி

கட்டுமானத் தொழிலாளா்கள் மறியல் போராட்டம்

தக்கலை அருகே முட்டைக்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்

கன்னியாகுமரி

கட்டுமானத் தொழிலாளா்கள் மறியல் போராட்டம்

தக்கலை அருகே முட்டைக்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தக்கலை அருகே முட்டைக்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப் போராட்டத்திற்கு ஜாண் இம்மானுவேல் தலைமை வகித்தாா். வட்டார செயலா் சுஜா ஜாஸ்பின், நிா்வாகிகள் ஜாண் சவுந்தரராஜ், சந்திரகலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்,. மறியல் போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவா் சைமன் சைலஸ் தொடங்கிவைத்தாா். மறியல் போராட்டம் நடத்திய 32 பெண்கள் உள்பட 75 கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு குலசேகரம் வட்டாரத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச்ச செயலா் எம்.வல்சகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பி. விஸ்வம்பரன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். நாணுகுட்டன், ஜெகதீஸ்குமாா், சிவகுமாா், தங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளா் ரெகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். நல வாரிய பலன்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →