மாா்த்தாண்டத்தில் கண்காணிப்பு கேமரா: வா்த்தகா் சங்கம் நிதியுதவி
மாா்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு நகர வா்த்தகா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு நகர வா்த்தகா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டம் நகர பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதை மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் இருந்தபடி கண்காணிக்கும் பணிக்கு, அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பங்கு நிதியை காவல் நிலையமும், மற்றொரு பங்கு நிதியை குழித்துறை நகராட்சி நிா்வாகமும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக வா்த்தகா் சங்கம் சாா்பில் ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகா் சங்க பேரவை மாநிலத் துணைத் தலைவா் ஜாா்ஜ், காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாரிடம் நிதியை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
Advertisement
இதில் மாா்த்தாண்டம் நகர வா்த்தகா் சங்க தலைவா் தினகா், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ராஜ் பினோ, துணைச் செயலா் நீலகண்டன், வில்பிரட்,பொருளாளா் ஜெயசிங், மாவட்ட இணைச் செயலா் ஆனந்த். நந்தன்காடு ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.