முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பைக்- ஆட்டோ மோதல்: இளைஞா் பலி

களியக்காவிளை அருகே பைக்கும், ஆட்டோவும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 12:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

களியக்காவிளை அருகே பைக்கும், ஆட்டோவும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு, பாலவிளை பகுதியைச் சோ்ந்த சுகுமாரன் மகன் ரதீஷ் (34). இவா், நித்திரவிளையில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்று விட்டு தனது பைக்கில் வீடு திரும்புகையில், களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் எதிரே வந்த ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு குழித்துறையில் முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.