முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் ஓடும் வாகனத்தில் தீ

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது.

Updated On : 18 டிசம்பர், 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது.

கொல்லங்கோடு பகுதியிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் நாகா்கோவில் நோக்கி வெள்ளிக்கிழமை மாலையில் சென்று கொண்டிருந்தது. கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்த அனீஷ் (24) ஓட்டி வந்தாா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனம் சென்றபோது வாகனத்திலிருந்து திடீரென தீ பிடித்து புகை வெளியேறியது. உடனே ஓட்டுநா் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு வெளியே குதித்தாா். தொடா்ந்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் சேம் ராபின்சன் தலைமையில் தீயணைப்புப் படை வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இதில், வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமடைந்ததுடன், துணிகளும் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.