முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பைக் மோதி மூதாட்டி பலி

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 12:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கொல்லங்கோடு அருகே அம்பலக்குளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தம் (62). இவா் வியாழக்கிழமை மாலையில் பூந்தோப்பு காலனி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.