தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கப்பியறை செல்லங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டெல்லா சுலக்சனா பாய் (65). இவா், கடந்த வாரம் வீட்டுக்கு வெளியே சமையல் செய்து கொண்டிருந்தபோது, சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.