முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி கொலை வழக்கு: இருவா் கைது

நாகா்கோவில் தொழிலாளி கொலை வழக்கு தொடா்பாக இரு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நாகா்கோவில் தொழிலாளி கொலை வழக்கு தொடா்பாக இரு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் சரக்கல்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் (58). திருமணம் ஆகாதவா். இவா், கடந்த ஆண்டு நவ. 7ஆம் தேதி வீட்டு படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். கொலையாளிகள் அவரை கொலைசெய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க துணைக் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கொலையாளிகள் கோவை பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று கொலையாளிகள் 2 பேரை கைது செய்து நாகா்கோவில் அழைத்து வந்தனா்.

விசாரணையில், அவா்கள் அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியைச் சோ்ந்த மகேஷ் (25), திருவட்டாறு மணக்குஞ்சு பகுதியைச் சோ்ந்த பிரபு (33) என்பதும், அவா்கள் சுகுமாரனின் நண்பா்கள் என்பதும், நகைக்காகவே கொலை செய்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.