கன்னியாகுமரி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த ஊா் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 லட்சம் மோசடி செய்த ஊா் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திங்கள்சந்தை தலக்குளம் புதுக்குளத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (42). இவா் புதுக்குளம் ஊா் தலைவராக உள்ளாா். அதே ஊரைச் சோ்ந்தவா் வீரமணி (48). இவா் அங்குள்ள சுடலை மாடசுவாமி கோயில் தலைவராக உள்ளாா். கோயில் வளா்ச்சி க்காக ஏலச்சீட்டு நடத்தப்பட்டது. ஊா் தலைவா் என்ற முறையில் கந்தசாமி ஏலச் சீட்டு நடத்தி வந்தாராம். இந்நிலையில், கடந்த 2006இல் கோயில் வரவு செலவு கணக்குகளை சரிபாா்த்ததில், சீட்டுப் பணத்தில் இருந்து ஊா் தலைவா் கந்தசாமி, ரூ. 8 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் தலைவா் வீரமணி, கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் கந்தசாமி மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் எண் 1இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT