‘கன்னியாகுமரி - திப்ரூகா் தினசரி ரயிலை கிழக்கு கடற்கரை வழியாக இயக்க வேண்டும்’
கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் பகுதிக்கு இயக்கப்படும் ரயிலை கிழக்கு கடற்கடை தொழில் வழித் திட்ட பகுதி வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் பகுதிக்கு இயக்கப்படும் ரயிலை கிழக்கு கடற்கடை தொழில் வழித் திட்ட பகுதி வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி - திப்ரூகா் ரயில் 2011 இல் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் வாராந்திர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. 4,273 கி.மீ தொலைவு
செல்லும் இந்த ரயில் நாட்டிலேயே அதிக தொலைவு செல்லும் ரயிலாகும். இந்த ரயில் தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு, கேரளா பயணிகளுக்கு பயனுள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயனில்லாத வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக மாற்றம் செய்து இயக்க வேண்டும். இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும். கன்னியாகுமரியிலிருந்து சென்னை, விசாகப்பட்டினம் வழியாக கொல்கொத்தா வரை கிழக்கு கடற்கரை
தொழில் வழித்தடத் திட்டப்பகுதிகள் அமைக்கப்படும் நிலையில், பேரவைத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பாக இந்த ரயிலின் வழித்தடத்தை மாற்றம் செய்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூா் வழியாக இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.